கீரைக் கடைக்கு எதிர்க் கடையும் ஹக்கீமின் வங்குரோத்து அரசியலும்

245
கிழக்கு மாகாணத்தில் தாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்றும் தங்களை விட்டால் முஸ்லிம்களை ஏமாற்ற மாற்றுக் கட்சி இல்லை என்றும் கிழக்கு மக்களை ஏமாற்றி வந்த ஹக்கீம் கட்சிக்கு எதிராக,

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் மயில் கட்சி அம்பாறையிலும் ஏனைய இடங்களில் யானைச் சின்னத்திலும் களமிறங்கியுள்ளதால் ஹக்கீம் கட்சி ஆட்டம் கண்டு விட்டது என்பது மட்டும் உண்மையாகவே உள்ளது.

மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக கிழக்கு மக்களை ஏமாற்றி ஊருக்கொரு தேசியப் பட்டியல் எம்பி தருவதாகவும் கட்சிக்குள் இருந்த திறமசாலிகள் புத்தசாலிகள் மற்றும் முன்னேறி வரும் தலைகைளை ஓரங்கட்டி ஒதுக்கி அரசியல் செய்து வந்தார்.

ஹக்கீம் என்னும் கீரைக் கடைக்கு எதிர்க்கடையில்லாது தத்தளித்த கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு றிஷாத்தின் கிழக்கு வருகை நல்ல தீனியாகவும் நல்ல எதிர்க்கடையாகவும் அமைந்து விட்டது.

ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக அதாவுல்லா ,றிஷாத் பதியுதீன், ஒட்டமாவடி அமீர் அலி, . கிண்ணியா நஜீப் ஆகியோரையே ஆரம்ப காலத்தில் கட்சியை விட்டு ஓரங்கட்டி வந்தார்.

இவர்களை ஓரங்கட்டுவதன் மூலமாக அவர்களின் அரசியலை அளிக்கலாம் என்றுதான் ஹக்கீம் கணக்குப் போட்டிருந்தார். கிண்ணியா நஜீப்பைத் தவிர மற்ற எல்லோரும் தனியான கட்சிகள் மூலம் தங்களது அரசில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

றிஷாத்தை பொறுத்த மட்டில் தனது திறமைகளினால் குட்டி அஷ்ரப் என்று மக்களால் பெயர் பெற்றவர். ஆனால் ஹக்கீம் கட்சியின் தளமான அம்பாறையில் ஹக்கீமுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தவர் அதாவுல்லா.

இம்முறை றிஷாத் அம்பாறைக்கு வந்த பின்பு அதாவுல்லா என்ற பேச்சு இல்லாமல் போய்விட்டது. இப்போது மிகவும் குறுகிய காலத்திக்குள் றிஷாத் அம்பாறையில் கால் பதித்து விட்டார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் றிஷாத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார் இதை இனிமேல் ஹக்கீமால் தடுக்க முடியாது.

றிஷாத்திக்கு கல்லெறி

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற றிஷாத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது றிஷாத் பேசிக் கொண்டிருக்கும் போது ஹக்கீம் கட்சிக்காரர் ஒருவர் கல்லெறிந்து கூட்டத்தைக் குளப்ப முயற்சித்துள்ளார்.

ஆனால் ஹக்கீம் கட்சிக்காரர்களின் இந்த அநாகரீக செயல்களினால் ஹக்கீம் கட்சி மிகப் பெரிய பாரிய வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்ற கருத்து அம்பாறை மாவட்டத்தில் நிலவி வருகின்றது.

றிஷாத்தின் அம்பாறை வருகையானது ஹக்கீம் கட்சிக்கு மிகப் பெரிய சரிவையும் சவாலையும் உருவாக்கியுள்ளது. றிஷாத்தின் வருகையினால் அதாவுல்லா என்ற பேச்சு மநை;து விட்டது. இந்தக் கல்லெறிக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பாரிய கண்டனம் கண்டுள்ளது.

றிஷாத்தை நேரடியாகத் தாக்கி வரும் ஹக்கீம்

றிஷாத்தின் வருகையினால் ஹக்கீம் பயந்து விட்டார். அதனால் தேர்தல் பரப்புரை மேடைகளில் ஹக்கீம் என்ன பேசுகின்றார் என்பது தெரியாமல் றிஷாத்தை போட்டுத் தாக்கி வருகின்றார்.

வடகிழக்கில் ஹக்கீம் கலந்து கொள்ளும் சகல தேர்தல் பரப்புரைகளிலும் றிஷாட்டை ஹக்கீம் தூற்றி வருகின்றார். இப்போது ஹக்கீமுக்கு தேர்தல் பரப்புரைக்கு எந்தவொரு விடயமும் இல்லாது றிஷாத் மஹிந்தருக்கு வாக்குப் பெறுவதற்கான முகவராம் என்று ஹக்கீம் பேசுகின்ற போது மக்கள் சிரிக்கின்றார்கள்.

காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தரை விட்டு முதன் முதலில் வெளியானவர் றிஷாத். தபால் வாக்களிப்பு முடிந்த பின்புதான் ஹக்கீம் மஹிந்தரின் ஆசீர்வாதம் பெற்று வெளியானார்.

உண்மையாக றிஷாத், மஹிந்த கம்பனியின் அதிகாரங்களுக்குப் பயப்படாமல் அவர்களின் அட்டகாசங்களுக்கு அஞ்ஞாமல் வெளியேறினார். றிஷாத்தின் வெளியேற்றம் என்பது வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் என்பதை யாரும் மறுக்க மறைக்க முடியாது.

றிஷாத்தின் வெயியேற்றமானது மிகவும் உயிராபத்து நிறைந்தது. தற்செயலாக மஹிந்தர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் றிஷாத் பழிவாங்கப் பட்டிருப்பார்.

ஹக்கீம் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆனால் றிஷாத் மஹிந்தரை விட்டு வெளியேறிய பின்னர் றிஷாத்துக்கு அம்பாறையில் மிகப் பெரிய ஆரவாரம் மகிழ்ச்சி வரவேற்பு முஸ்லிம் மக்களால் கிடைத்தது. அதனால் ஹக்கீம் பயந்து விட்டார்.

அதன் பின்பு வருகின்ற பொதுத் தேர்தலில் மு.கா.செல்லாக் காசாகி விடும். மு.கா. க்கு அம்பாறை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் அதனால் நாங்கள் உங்களை விட்டு வெளியேற வேண்டும் நாங்கள் என்றும் உங்களைத்தான் ஆதரிப்போம் என்று மஹிந்தவிடம் சொல்லிட்டுத்தான் வெளியேறினார்.

ஆனால் இப்போது நாங்கள்தான் ஆட்சி மாற்றம் செய்தோம். நாங்கள்தான் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம் என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோசம் இல்லாமல் நாக் கூசாமல் உடம்பில் அசைவின்றி ஹக்கீம் பேசுவது நியாயமா? இதில் ஏதாவது உண்மைத் தன்மை உள்ளதா?

ஹக்கீம் கட்சி பாரிய சரிவைச் சந்திக்கின்றதா?

கிழக்கில் ஹக்கீம் கட்சி பாரிய சரிவுக்குள் வந்து விட்டது.அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீம் கட்சி மிகவும் பின்தள்ளப்பட்டு விட்டது. அம்பாறைரை மாவட்டத்தில் ஹக்கீம் உளறி வருகின்றார்.

ஹக்கீம் என்ன பேசுகின்றார் என்பதே புரியாமல் தடுமாறி வருகின்றார். இப்போது ஹக்கீம் நேரடியாக றிஷாத்தையும் றிஷாத் கட்சியின் வேட்பாளர்களையும் தாக்கி வருகின்றார்.

சம்மாந்துறை வேட்பாளர் றிஷாத் அணியில் போட்டியிடும் இஸ்மாயில் என்பவர் வெற்றியடைந்தாலும் எம்பியாக முடியாது அப்படி எம்பியானால் எனது காதை அறுப்பேன் என்று ஹக்கீம் பொது மேடையில் பேசியுள்ளதானது வெட்கம் கெட்ட அசிங்கமான பேச்சாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.

ஒரு கட்சியின் தலைவர் பேசும் பேச்சாகப் பார்க்கப்படவில்லை. ஹக்கீம் என்பவர் தேர்தல் மேடைகளில் ஒரு கட்சியின் தலைவராக சாணக்கியமாக மக்கள் கவர்ச்சியாக பேசக் கூடியதாக இல்லை என்பதை ஹக்கீம் புடம் போட்டுக் காட்டி விட்டார். காட்டி வருகின்றார்.

இந்த வாய்ப்பை றிஷாத் அம்பாறை வந்த பின்புதான் மக்களால் அதிகளவு அறிய வந்துள்ளது. எந்வொரு எதிர்காலத் திட்டமும் இல்லாது மக்களை ஏமாற்றி அரசியல் பிளைப்பு அரசியல் வியாபாரம் நடத்தி வரும் ஹக்கீம், தமிழ்- முஸ்லிம் இணைப்பை விரும்பாத ஹக்கீம், தமிழ் மக்கள் உறவுக்குத் தடையாக இருந்து வரும் ஹக்கீம், முஸ்லிம் மக்களிடம் இருந்து அகற்றப்பட வேண்டும்

நீக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மக்கள் அதிகளவு விரும்புகின்றார்கள். கிழக்கு முஸ்லிம் மக்கள் ஹக்கீமிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற அவா எண்ணம் கிழக்கு மக்களிடம் அதிகளவு இருக்கின்றது.

றிஷாத்தின் பாரிய வெற்றி

றிசாத் மஹிந்தரை விட்டு வெளியேறிய பின்னர் ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் பேச்சுவார்த்தை செய்திருந்தார். அந்தப் பேச்சு வார்த்தையில் றிஷாத் தனது வேட்பாளர்களை யானைச் சின்னத்தில் களமிறக்குவதாகவே பேச்சுவார்த்தைகள் அமைந்தது.

ஆனால் அம்பாறையில் றிஷாத் அணிக்கு யானைச் சின்னத்தில் வேட்பாளராக இடம் கொடுக்கக் கூடாது என்று ஹக்கீம் ரணிலுக்கு கொடுத்த அளுத்தம் காரணமாகவே றிஷாத் தனது மயில் சின்னத்தை அம்பாறையில் இறக்க வேண்டிய நிலை உருவானது.

இதன் மூலமாக றிஷாத் தனக்கு உண்மையாகவே ஆதரவு உள்ளதா தொடர்ந்து எதிர்காலத்தில் அம்பாறையில் இருக்கலாமா, வேண்டாமா என்ற ஒரு உருப்படியான தகவலை கருத்தை அறிய ஹக்கீம் றிஷாத்திற்கு களம் அமைத்துக் கொடுத்து விட்டார்.

ஹக்கீம் யானைச் சின்னத்தில் ஒட்டிக் கொண்டு றிஷாத்தின் மயில் சின்னத்தை அம்பாரைக்கு அறிமுகம் செய்வதற்கான அரிய வாய்ப்பை ஹக்கீம் செய்துள்ளார்.

இதன் மூலம் மரம் மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டு மயில் நினைவுக்கும் களத்திலும் வந்து விட்டது. வடக்கில் றிஷாட்டின் மயில் சின்னம் முஸ்லிம் மக்களுக்கு என்னவென்றே தெரியாத நிலையில் அம்பாறையில் மயில் தோகை விரித்து விட்டது.

தற்போதைய பொதுத் தேர்தலில் றிஷாத் கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் மூன்று எம்பிக்கள் பெறும் நிலையுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தலில் றிஷாத் அணியினர் குறைந்தது 3 மாகாண சபை உறுப்பினர்களை வென்றெடுத்தால் ஹக்கீம் முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடுவார் என்பது மட்டும் தெளிவாகின்றது.

காரணம் பொத்துவில் தொட்டு புல்மோட்டை வரையுமான பிரதேச சபைகள் எதிர்வரும் காலங்களில் றிஷாத் வசமாகும்.கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக கிழக்கு றிஷாத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விடும்.

ஹக்கீம் கண்டி மாவட்ட ஹலகெதர தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளராக நியமிக்கப்பட்டு தனது அரசியலை அங்கு முடிப்பார். இதைத்தான் தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள்.

எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com

SHARE