கீர்த்தி சமீபத்தில் விருது வாங்கினார் அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தந்தார்.

121

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வருகிறார். தெலுங்கில் மகாநடி படத்திற்கு பிறகு இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

இந்நிலையில் இதே படத்திற்காக கீர்த்தி சமீபத்தில் ஒரு விருது வாங்கினார், அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தான் தந்தார்.

அப்போது எப்போது ஜெயம் ரவியுடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு ‘என்னிடம் பலரும் ஏன் ரவியுடன் மட்டும் நடிக்கவே இல்லை என்று கேட்கிறார்கள்.

ஒரு சில படங்கள் நாங்கள் நடிப்பதாக இருந்து தள்ளி சென்றது, பலரும் கேட்பதால், அதற்காகவே அவருடன் ஒரு படத்தில் நடித்தே ஆகவேண்டும்’ என்று கீர்த்தி கூறியுள்ளார்.

SHARE