நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வரவுள்ளன. சாமி2, சர்கார் என பெரிய படங்களில் அவர் நடித்துள்ளார்.
அடுத்து அவர் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும், சசிக்குமார் ஜோடியாக கொம்பு வெச்ச சிங்கம் என்கிற கிராமத்து பின்னணி கொண்ட படத்திலும் அவர் நடப்பார் என சமீபத்தில் தகவல் பரவியது.
ஆனால் தற்போது கீர்த்தி தரப்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளது. சர்கார் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் இதுவரை கமிட் ஆகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சசிகுமார் படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.