
ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் பெரும் சர்ச்சைக்குள்ளான குசால் ஜனித் பெரேரா, இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள உள்ளார்.
வீசா நடைமுறைகள் பூர்த்தியானதன் பின்னர் குசால் இங்கிலாந்துக்கு பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் உபாதை காரணமாக நாடு திரும்புகின்றார்.இந்த வெற்றிடத்திற்கு குசால் பெரேராவை இலங்கை கிரிக்கட் அணித் தெரிவாளர்கள் தெரிவு செய்துள்ளனர்.
சிறந்த துடுப்பாட்ட வீரரான குசால் அணிக்கு மேலும் வலு சேர்ப்பார் என அணியின் தெரிவாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த குசால், குற்றமிழைக்கவில்லை எனத் தெரிவித்து அவரது தடை அண்மையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.