குடா நாட்டுக்கு வெளியே யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது : பிரதமர் ரணில் விக்ரமசிங்க

522

குடா நாட்டுக்கு வெளியே தெற்குப் பக்கமாக யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது எனவும், இதன் மூலம் வன்னி அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அபிவிருத்திகளை யாழ்ப்பாணத்திற்குள் மட்டும் வைத்திருக்காது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்க வேண்டும்.

குடா நாட்டுக்கு தெற்கு பகுதியில், பூநகிரி மற்றும் வன்னியின் ஏனைய பகுதியிலும் யாழ். நகருக்கு சமமான நகரொன்றை அமைக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE