குடிநீர் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

191

திருகோணமலை – கிண்ணியா, பைசல் நகர் நபவி பள்ளிவாசல் பின் வீதிக்கான குழாய் நீர் அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாக இன்று குழாய் நீர் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினை அப்பகுதியில் நிலவி வந்ததையடுத்து இவ்வேலைத் திட்டத்தை நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இக் குழாய் குடிநீர் திட்டத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் சலாம் அனீஸ், யாகூப் பைசல் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

 

 

 

SHARE