குடிபோதையில் நடுவீதியில் வாகனத்தைக் கைவிட்டுச் சென்ற சாரதி! ஹங்வெல்லைச் சம்பவம் தொடர்பில் தகவல்

277
ஹங்வெல்லயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனம், சாரதியொருவரின் குடிபோதை காரணமாக ஏற்பட்ட குளறுபடி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

நடுவீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிசார் குறித்த வாகனத்தைக் கண்டுபிடித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வாகனம் தற்போது பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பயன்பாட்டில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த வாகனம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அமைச்சின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சாரதி, சம்பவம் நடந்த இரவில் குடிபோதையில் தனது வீட்டு முற்றம் என்று நினைத்து தவறுதலாக வாகனத்தை நடுவீதியில் நிறுத்திச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

car

SHARE