குடிபோதையில் பொலிசார் இருந்தனரா என்பதனை,அடுத்த 80 மணித்தியலங்களுக்குள், அவர்களது சிறுநீரை பரிசோதித்து அறிந்து கொள்ள முடியும்

252

 

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வைத்திய அதிகாரி, மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்குரிய அடையாளங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த கொலையை செய்த 5 பொலிசார் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கைது ஒரு நாடகமாகவே செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்திற்கு சாட்சிகள் எதுவுமில்லாத சந்தர்ப்பத்தில், கைது செய்யப்பட்டதாக சொல்லப்படும் பொலிசார் பிணையில் விடுதலை செய்யப்படுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு கடைமையில் இருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் குடிபோதையில் நின்றுள்ளனர்.

இதனை பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கஞ்சா போதையிலேயே குறித்த உத்தியோகத்தர்கள் நின்றுள்ளதாகவும் வேகமாக வந்து கொண்டீருந்த மாணவர்களை, திடீரென மறித்ததாகவும், மாணவர்கள் வேகத்தை குறைக்கும் முன்னரே, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இரவு கடைமையில் ஈடுபடும் பொலிசார் இவ்வாறு நிறைபோதையில் இருந்ததாக முன்னரும் பல பொதுமக்களால் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

வெறுமனே மாணவர்களை முட்டாளாக்கும் செயலாக, ஐந்து பொலிசார், கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பொலிசார் மதுபோதையில் இருந்தனரா?என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென மாணவர்கள் கோரியுள்ளனர்.

குடிபோதையில் பொலிசார் இருந்தனரா என்பதனை,அடுத்த 80 மணித்தியலங்களுக்குள், அவர்களது சிறுநீரை பரிசோதித்து(Urine alalysis for EtG) அறிந்து கொள்ள முடியுமென ரஷ்யாவின் சிறப்பு சட்ட வைத்திய அதிகாரி எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

SHARE