குடியமர்வு அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்ட 43 அகதிகள்

537

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண் அகதிகள் அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள், பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நைஜீரியா அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போகோ ஹாரம் தீவிரவாத அமைப்பு சமீபத்தில் நூற்றுக்கணக்கானவர்களை சிறைப்பிடித்தனர்.

இவர்களில் சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.‘தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்களும் சிறுமிகளும் தற்போது குடியமர்வு துறை அதிகாரிகள், பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்று தற்போது வரை 43 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது அகதிகளை மேலும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் செயல்’ என மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அகதிகள் கற்பழிக்கப்படுவது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரான முகமது புகாரி தெரிவித்துள்ளார்.

நைஜீரியா அரசுக்கு எதிராக கடந்த 2009ம் ஆண்டு முதல் போகோ ஹாரம் நடத்திய தாக்குதலில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE