முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நீண்ட கால நண்பரான டலஸ் அழகபெருவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த தரப்பினர் தொடர்பிலான பொறுப்புக்களை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கியமைக்கு, டலஸ் அழகப்பெரும எதிர்ப்பு வெளியிட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
டலஸ் அழகபெரும, மஹிந்த அணியை கைவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இணையவுள்ளதாக கடந்த நாட்களில் செய்தி வெளியாகியிருந்தன. எனினும் குற்றச்சாட்டை டலஸ் நிராகரித்த போதிலும் மஹிந்த அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் மஹிந்த தனது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதனை தற்போது தான் அவரது ஆதரவாளர்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.