குடும்ப தலைமைத்துவ பெண்கள் மீது கரிசனை காட்டும் டக்ளஸ் தேவானந்தா

277
வட, கிழக்கு மாகாணங்களில் குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் நிலையிலுள்ள பெண்களை உள்ளடக்கியதான விசேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
dauglas

தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான உதவித் திட்டங்களின் மூலமாக தங்களுக்குரிய பல்வேறு தீர்வுகளைப் பெற இயலாத நிலையிலேயே குடும்பத் தலைமைகளை ஏற்றிருக்கும் பெண்கள் உள்ளனர்.

இந்தப் பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வருகின்ற நிறுவனங்கள் கொடுத்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றன. எனினும் இப் பெண்கள் அந் நிதியைக் கொண்டு தங்களது வாழ்வாதாரங்களை நிலை நிறுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சமூகப் பொறுப்பாக நினைத்து வழங்க நிறுவனங்கள் முன்வருவதில்லை. இதனைால் நிதியைப் பெறும் பெண்கள் அவற்றை மீளச் செலுத்த இயலாமல் கடனாளிகளாக மாறும் நிலைமைகள் தொடருகின்றன.

அத்துடன் இந்தப் பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, இப் பெண்களுக்கான விசேட நிவாரணங்கள், உதவித் தொகைகள், உதவித் திட்டங்கள், உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் ஆலோசனைகள் என்பன அனைத்தும் அடங்கும் வகையிலான ஒரு விசேட செயற்திட்டம் அவசியமாகவும் அவசரமாகவும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE