சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு, முன்னிலை சோசலிசக் கட்சியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அநுர குமார , கோத்தபாய ராஜபக்ச ஊடாக அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு ஆதரவு பெற்றுகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் குணரத்னம் உத்தியோகபூர்வ பொலிஸ் அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கமைய கைது செய்யப்படவில்லை எனவும் இது ஒரு கடத்தலை போன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த கடத்தலை தொடர்ந்து அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஒரு சில நாட்களில் குமார் குணரத்னம் விடுதலை செய்யப்பட்ட போதிலும், தெமட்டகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ரகசியமாக அவரை விட்டு சென்றுள்ளனர்.
அவரை இவ்வாறு கைது செய்ததனை கோத்தபாய ராஜபக்ச ஒரு போதும் ஏற்றுகொள்ளவில்லை.
ஏதாவது ஒரு வகையில் குணர்தனத்தை விடுதலை செய்யுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், குணரத்னத்தின் பெயர், அந்த கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் போன்று காணாமல் போனோரின் பெயர் பட்டியில் இருந்திருக்கும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.