அமெரிக்காவில் யூதர்கள் வழிப்படும் இரண்டு கோயில்கள் மீது குண்டு வீசிய இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் bergen என்ற நகரில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் வசித்து வந்த Anthony Graziano மற்றும் Aakash Dalal ஆகிய இருவரும் யூதர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளனர்.
இருவரும் அடிக்கடி உரையாடியபோது ‘யூதர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த வேண்டும்’ என உறுதியெடுத்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், ‘நீ ஒரு யூதரையாவது கொல்ல வேண்டும்’ என ஒருவர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு யூதர்கள் வழிப்படும் இரண்டு கோயில்கள் மீது இருவரும் எரிகுண்டுகளை வீசியுள்ளனர்.
எனினும், இத்தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
இச்சம்பவத்தை தொடர்ந்து நடந்த விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டு அவர் மீது தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தில் ஈடுப்பட்ட இருவரும் 19 வயதுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இனவெறியை தூண்டும் வகையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது இருவருக்கும் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.