ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வேறு வழியில்லாததால் குப்பை அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்படுவது அங்குள்ள அப்பாவி மக்களே.
இந்த போர் காரணமாக ஏராளமானோர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் குர்தீஷ் பகுதியில் இடம் பெயர்ந்துள்ள அகதிகள் வாழ வழியில்லால் அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பை அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளில் இருந்து உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை எடுத்து மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் விற்பது மூலம் நாள் ஒன்றிற்கு 9 முதல் 27 டொலர் வரை சம்பாதிக்கின்றனர். சுகாதாரக்கேடு நிறைந்த இந்த இடத்தில் குழந்தைகளும் வேலை செய்வது தான் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. பசியின் காரணமாக அங்குள்ள குப்பைகளில் உள்ள கெட்டுப்போன உணவுகளை உண்ணும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அகமது என்ற 16 வயது சிறுவன் கூறுகையில், இது வாழ்க்கையே அல்ல, எனினும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளான். அகமதுவை போன்று ஏராளமான சிறுவர்கள் இந்த குப்பை கிடங்கில் வேலை செய்துவருகின்றனர். |