குப்பை கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

232

களனி கங்கையில் குப்பை கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.13187732_10208783630575558_365056022_n-635x410

SHARE