குமரபுரம் படுகொலை வழக்கில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

260

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவத்தினர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற படுகொலையின் போது 26 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்த வழக்கு தற்போது அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இன்று பத்தாவது நாளாகவும் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின், சம்பவத்தின் போது தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிலர் சாட்சியமளித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினரையும் பாதிகப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது 16 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை குறித்தும் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பில் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE