குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

281

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி குமார் குணரட்னத்தை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேகாலை நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நான்காவது தடவையாக குமார் குணரட்னம் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தி அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார்.

SHARE