குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

287

 

குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: மங்கள- இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்! நாவின்ன
mangala-colombotelegraph

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

எனினும் தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் குமார் குணரட்னத்தை விடுதலை செய்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருகின்றது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னம் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்! நாவின்ன

வீசா முடிவடைந்தும் இலங்கையில் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோசலிஸக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் குமார் குணரட்னம் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு அபிவிருத்தி அமைச்சர் எஸ் பி நாவின்ன இதனை தெரிவித்துள்ளார்.

குணரட்னத்தை பொறுத்தவரை  அவர் இலங்கையில் இருந்து இலங்கை பிரஜாவுரிமையை கோரமுடியாது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி அங்கிருந்து அதனை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இலங்கையில் 4000பேர் வரை இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE