குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது

303

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். குமார் குணரட்னம், அவுஸ்திரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் குமார் குணரட்னத்திடம் கோரியிருந்தது.
எனினும், தமக்கு இலங்கையில் அரசியல் செய்ய உரிமையுண்டு எனத் தெரிவித்து தொடர்ச்சியாக இலங்கையில் குணரட்னம் தங்கியிருந்தார். 1987-89ம் ஆண்டு தேர்தலின் போது குணரட்னம் திருகோணமலை மாவட்டத்தின் ஜே.வி.பி தலைவராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டில் அவர் ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்றார். கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி குமார் குணரட்னம் சுற்றுலா வீசாவின் அடிப்படையில் இலங்கைக்கு சென்றிருந்தார். 30 நாள் வீசா அடிப்படையில் அவர் இலங்கை சென்றிருந்தார்.

SHARE