குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு .

322

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் இலங்கையில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்கள் நாடு கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்கியின் கொள்கைகளுடன் முரண்பட்ட போதிலும், கைது செய்து நாடு கடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE