குமார் குணரத்னம் மீண்டும் கைது

287
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்னம், கேகாலை அங்குருவெல்ல பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு லங்காசிறி இணையத்தளத்திற்கு தெரிவித்தது.

குமார் குணரத்னம், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

தற்போது அவர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியது.

SHARE