இந்திய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கும்ளேவுக்கு ஒரு வருட ஊதியமாக 6.25 கோடி ரூபாயை பிசிசிஐ அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.
அதன் நியமனத்துக்கு பின்னர் அவர் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவு சென்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து கும்ளேவுக்கு ஒரு வருட ஊதியமாக 6.25 கோடி ரூபாய்யை அவரது வங்கி கணக்கில் பிசிசிஐ செலுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் இந்திய தலைமை பயிற்சியாளராக இருந்தவர்களில் கேரி கிறிஷ்டன் மற்றும் டன்கன் பிளட்சர் 3 முதல் 4 கோடி வரை தான் ஊதியமாக பெற்றுள்ளனர்.
இந்திய தலைமை பயிற்சியாளர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச ஊதியத்தில் கும்ப்ளே இரண்டாவது இடம் வகிப்பதாகவும், முதலிடத்தில் ரவிசாஸ்திரி உள்ளதாகவும் கூறப்படுகிறது.