ஒவ்வொரு நாளும் ஒரு அப்பிளை உண்பதால் வைத்தியரை நாடும் தேவை இருக்காது என பரவலாக கூறப்படுவது வழக்கம்.
அதேபோன்று ஆரஞ்சுப் பழமும் குருட்டுத் தன்மையின் முக்கியமான காரணிக்கு பரிகாரம் காண்பதாக அவுஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பொதுவாக 60 வயதைத் தாண்டியவர்களுக்கு விழித்திரையின் நடுப்பகுதியில் ஒருவகைபாதிப்பு ஏற்பட்டு, பார்வைப் புலன் இழக்கப்படுவது வழக்கம்.
தினந்தோறும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் செறிந்த பழங்களை உண்பதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.