குருணாகலை போன்று முழு நாடும் மஹிந்தவினால் ஏமாற்றமடையுமா?

183

rajapakse

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் தனக்கு ஓய்வாக நேரத்தை கழிப்பதற்கு மெதமுலன வீடு மாத்திரமே உள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஆட்சியாளராக ஆவதற்கு அரசியலமைப்பை தனக்கு அவசியமான வகையில் மாற்றிக் கொண்டார்.

நாட்டின் தலைவர் அதிகார அவசியத்தில் உள்ள முறையினை எந்த ஒரு நபரினாலும் பார்த்துக் கொள்ள முடியும். நாட்டின் சட்டத்திற்கு அழுத்தம் ஏற்படுத்துகின்ற முறை, தனது உரிமைக்காக குரல் எழுப்பிய மக்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை, அரசாங்க திறைசேரியை தனது தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்தினார்.

இனவாதம் மற்றும் யுத்தத்தின் மூலமே மஹிந்த தன்னை தக்கவைத்துக் கொள்கின்றார். இனவாதத்தை பரப்புவதற்காக பல்வேறு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டதுடனாலே சிறுபான்மை மக்களுக்கு மஹிந்த மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் பிரபல தன்மை குறைய ஆரம்பிப்பதாக அப்போதைய அரச புலனாய்வு பிரிவு அறிவித்ததனை தொடர்ந்து தனது பதவி காலம் மேலும் 2 வருடங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார்.

இறுதியில் சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவை அழைத்து பொருத்தமான நாள் ஒன்றை தெரிவு செய்தார். இதேவேளை, எதிர்க்கட்சி உட்பட சிவில் அமைப்புகளின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

பல தடைகளுக்கு மத்தியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதை தொடர்ந்து மஹிந்த அரச ஹெலிகொப்டரில் மெதலமுலனையில் தரையிறக்கப்பட்டார்.

மெதமுலன வீட்டிற்கு சென்று ஓய்வு பெறுவதற்கு பதிலாக வீட்டு ஜன்னலில் இருந்து, மைத்திரி புலிகளின் வாக்குகளினால் தேர்தலில் வெற்றி பெற்றார் என மக்களுக்கு மஹிந்த அறிவித்தார்.

இந்த நிலையில் எப்படியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என சிந்தித்த மஹிந்த இறுதியில் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

எனினும் அந்த தேர்தலிலும் தோல்வியடைந்த மஹிந்தவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக ஆசனம் பெற நேரிட்டது. இதுவரையில் மிகவும் சூழ்ச்சியான வகையில் மக்கள் பிரதிநிதியான ஷாந்த பண்டாரவை தோல்வியடைய செய்து, குருணாகல் மக்களின் நேர்மையான பிரதிநிதியை அந்த மாவட்டத்திற்கு இழக்க செய்தார்.

இதனால் குருணாகல் மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் நன்மை குறைவடைந்துளள்து. மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்ட மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து அந்த மக்களுக்கு வருடாந்தம் கிடைக்க வேண்டிய நன்மைக்காக சேவை செய்யாமல் இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். மஹிந்த ராஜபக்ச குருணாகல் மக்களை முட்டாளாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக புதிய கட்சி ஒன்றை உருவாக்கி பிரதமராகுவதே அடுத்த கனவாக உள்ளது. எனினும் இந்த புதிய கட்சியினுள் மஹிந்தவுடன் இருப்பது பாரிய மோசடி குழுவாகும்.

எப்படியிருப்பினும் மஹிந்த என்பவரே அதே பழைய மஹிந்த தான். பழைய பொருள் புதிய தோற்றத்தில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த உட்பட குழுவினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் பழைய நடவடிக்கைகளே மீண்டும் மேற்கொள்ளப்படும். குருணாகல் மக்கள் ஏமாற்றப்பட்டதனை போன்று முழு நாடும் ஏமாற்றப்படும் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE