குறைந்த செலவில் செல்லிடப் பேசியை பயன்படுத்தக் கூடிய நாடாக இலங்கை

294
மிகவும் குறைந்த விலையில் செல்லிடப் பேசியை பயன்படுத்தக் கூடிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

செல்லிடப் பேசி ஒன்றை பயன்படுத்த மிகவும் குறைந்த மாதாந்த செலவினைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

இதன்படி. இலங்கையில் 0.97 அமெரிக்க டொலரைக் கொண்டு செல்லிடப் பேசி ஒன்றை ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும் என சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

உலக சனத்தொகையில் பத்து பேரில் எட்டு பேருக்கு செல்லிடப் பேசி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவில் செல்லிடப் பேசிகள் பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையிலேயே செல்லிடப் பேசிக்கான செலவுகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

பங்களாதேஸ், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, பூட்டான், மொங்கோலியா, எதியோப்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு அடுத்த நிலைகளை வகிக்கின்றன.

மாதமொன்றுக்கு அதிகளவு செல்லிடப் பேசிக்காக செலவாகும் நாடாக துவாலு இராச்சியம் காணப்படுகின்றது.

மாதமொன்றுக்கான குறைந்தபட்ச செலவாக 45.73 அமெரிக்க டொலர்கள் செலவிட நேரிட்டுள்ளது.

நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், அன்டோரா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் செல்லிடப் பேசிக்கான மாதாந்த செலவு அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செல்லிடப்பேசி அழைப்புக்கள், குறுஞ்செய்தி மற்றும் டாட்டா கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Cell-Phones--Smartphones

SHARE