குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் – ஐ.நா

219

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல்கள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மிரோஸ்லோவ் ஜென்கா அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
நிச்சயமாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜென்கா 21ம் திகதி முதல் 25ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE