குளவி கொட்டுக்கு இலக்காகிய 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்களே 15.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.
கொழுந்து பரித்துக்கொண்டிருந்தபோது மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் 30பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்