குளவி தாக்குதலில் தொழிலாளர்கள் தம்மை பாதுகாத்தல் தொடர்பில் தொழிலாளர்களுக்கு கள பயிற்சி

307

மலையக தேயிலை மலைகளில் குளவி கொட்டுக்களில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னை  பாதுகாத்தல் மற்றும் குளவி கூடுகளை   பாதுகாப்பாக அகற்றுதல்  போன்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டம் மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பேராதெனிய பூச்சிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேன்பூச்சிகளில் தேன் எடுப்பது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

மஸ்கெளியா காட்மோர் பிரவுன்ஸ்வீக் பிரதேச தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மலையகம் தழுவிய ரீதியில் மேற்படி பயிற்சிகள் நடத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன விருத்திக்கு பயன்படும் தேன் பூச்சியினனத்தை பாதுகாக்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

6d644415-da5e-44e6-b4d3-199e978358d7 525874e1-ccb6-423b-9f74-46ef5e9496ac ad4083dc-c750-4943-a004-4a03451821df

SHARE