ஸ்பெயினின் பார்சிலோனா நகரில்நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசாஅருகே சுற்றுலாப்பயணிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த வேன்ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.
மக்கள் மீது வேனை மோதவிட்டு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50- க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர்மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர்கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த தாக்குதலில்இருந்து உயிர் தப்பிய நடிகை லைலா அந்த சம்பவம் குறித்து கூறியதாவது, இந்த தாக்குதல் நடந்தபோது நான் அங்கிருந்த ஒரு குளிர்சாதனப்பெட்டியில்ஒளிந்துகொண்டேன்.
தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது, குளிர்சாதனப்பெட்டிக்குள்இருந்தவாறே அவர் டுவிட்டரில், தற்போது நான்குளிர்சானப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறேன், அனைவரின் பாதுகாப்புக்காகவும் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
வெளியில் பயங்கர சத்தம் கேட்கிறது,என பதிவிட்ட அவர் தாக்குதல் முடிந்த வெளியே வந்த பின்னர், அங்கு பறந்து கொண்டிருந்தஹெலிகாப்டரின் காணொளியைப் பதிவு செய்து அதையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.