குளிர்பானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

164

குளிர்பானங்களில் நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இனிப்புகள் மற்றும் கலோரிகள் அதிக அளவில் அடங்கியுள்ளது. இத்தகைய குளிர்பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், பல்வேறு உடல் பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.

குளிர்பானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்?
  • குளிர்பானங்களில் உள்ள ஹை பிரக்டோஸ்கார்ன் எனும் சிரப் பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.
  • குளிர்பானம் குடிப்பதால் நம் உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும், பின் அது கொழுப்பாக மாறி உடலிலே தங்கி, ஈரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • குளிர்பானங்களில் உள்ள காபின், பானத்தை குடித்ததும் அதிக சக்தி கிடைப்பது போன்ற நிலையை உருவாக்கி, தொடர்ந்து அதனை குடிக்கும் அளவுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும்.
  • குளிபானத்தில் உள்ள காபின் அதிகமாக சிறுநீரை உருவாக்கும் தன்மைக் கொண்டது. அதனால் சிறுநீர் கழித்ததும் அதிக தாகம் மற்றும் சோர்வு நிலையை உருவாக்கும்.
  • அடிக்கடி குளிர்பானத்தை குடிப்பதால், சிறுநீரக கற்கள், வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றும்.
  • குளிர்பானங்களில் உள்ள அதிகளவு இனிப்புகள் பற்களை சேதமாக்கி, எலும்புகளில் உள்ள கால்சியத்தை பாதித்து, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
SHARE