குள்ளமான பொலிஸ்…உயரமான பொலிஸ்: அதிரடி வாசகங்களுடன் மிரட்டும் அவுஸ்திரேலிய காவல்துறை

327
அதிரடி வாசகங்களுடன் குள்ளமான பொலிஸ் மாற்றும் உயரமான பொலிசின் புகைப்படங்களை அவுஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து காவல்துறையினர், ஜான் மற்றும் மோனிக் ஆகிய இரு பொலிசாரின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இதில், ஜான் 6 அடி 9 அங்குலம் உள்ளார், ஆனால் மோனிக் 5 அடி 1 அங்குலம் தான் உள்ளார்.இதன் மூலம் காவல்துறை கூறவருவது என்னவெனில், குற்றம் எந்தவகையாக இருந்தாலும் வகைவகையான பொலிசார் எங்களிடம் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.

மேலும், இவர்களின் உயரத்தை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், உயரம் மாறுபட்டதாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்கு விடயத்தில் கவனமாக இருப்பார்கள் என்ற வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இம்கர் மூலம் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது.

SHARE