குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகள்

164

குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

அந்த வகையில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க என்னென்னெ உணவுகளை அளிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பச்சை நிற காய்கறிகள்

முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகள் சத்துகள், பீட்டா கரோட்டின், கேரட்டினாய்ட்ஸ் போன்றவை அதிக அளவில் இருப்பதால் இவை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்து, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பச்சைப் பட்டாணி

பச்சைப் பட்டாணியில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. பிளேவனாய்ட், கேரட்டினாய்டு, பினோலிக் ஆசிட் மற்றும் பாலிபினால் போன்ற சத்துகள் அதிகம் நிரம்பி இருக்கிறது.

முளை கட்டிய உணவுப் பொருட்கள்

முளை கட்டிய உணவுப் பொருட்களில் சத்துகள் எல்லாம் பல மடங்கு அதிகரிக்கிறது. முளைகட்டிய தானியங்களை குழந்தைகளுக்கு அளிக்கும் போது தேவையான சத்துகளும் எளிதாகவே கிடைக்கும்.

பரங்கிக்காய்

பரங்கிக்காய் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகளும் இதில் இருப்பதால் இவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

தயிர்

தயிரில் நல்ல பாக்டீரியா சத்து அல்லது புரோபயோடிக் எனப்படும் சத்துகள் உள்ளன.மேலும் இதனை தினமும் குழந்தைகளுகு அலிப்பதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் தன்மை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்ச், எலுமிச்சை, கொய்யா பழம் போன்ற பழ வகைகளில் அதிகமான வைட்டமின் சி சத்தும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகளும் உள்ளதால் இவைற்றை குழைதகளுக்கு அளிக்கலாம்.

விதைகள்

பாதாம் போன்ற கொட்டை வகைகள், வால்நட், பரங்கி விதை, ஃப்லாக்ஸ் சீட்ஸ், சூரியகாந்தி விதை போன்ற விதை வகைகளையும் நீங்கள் குழந்தைக்கு தரலாம்.

SHARE