குழந்தைகளை கற்பழித்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொலிசார் அதிர்ச்சி தகவல்..!!

241

பிரித்தானிய நாட்டின் முன்னாள் பிரதமரான சர் எட்வார்ட் ஹீத் இரண்டு குழந்தைகளை கற்பழித்தது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய நாட்டின் பிரதமராக சர் எட்வார்ட் ஹீத் கடந்த 1970 முதல் 1974-ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்துள்ளார்

இதுமட்டுமில்லாமல், 1965 முதல் 1975 -ம் ஆண்டு வரை கன்சேர்வேட்டிவ் கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பிரதமராக பதவி வகித்தபோது அவர் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தியதாக புகார்கள் கூறப்பட்டன.ஆனால், பதவி மற்றும் அதிகாரம் காரணமாக புகார்கள் அனைத்தும் நிரூபிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இப்புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என 1994-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், Wiltshire நகர் பொலிசார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அப்போது, முன்னாள் பிரதமரான சர் எட்வார்ட் ஹீத் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு புகார்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது, 10 வயது சிறுவனுக்கு பணம் கொடுத்து பாலியல் தாக்குதல் நடத்தியது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும், உடல்நிலை காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு சர் எட்வார்ட் ஹீத் உயிரிழந்துள்ளார்.

தற்போது முன்னாள் பிரதமர் உயிருடன் இருந்திருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளார்.

SHARE