குழந்தைகளை கவர புதிய மொபைல் ஆப் – ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி

283

லண்டன்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தங்களது இயக்கத்தில் அதிகளவில் குழந்தைகள் சேர்க்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை கவர்ந்து இழுக்க தற்போது வித்தியாசமான யுக்தி ஒன்றை கையாள திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகின்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள். இதன்படி புதிய ஸ்மார்ட்போன் ஆப்ஸ் ஒன்றை ஐ.எஸ் தீவிராத இயக்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. Huroof என்ற இந்த செயலியானது அரபு மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் குழந்தைகளுக்கு பயங்கர ஆயுதங்களை கையாளும் முறைகளை கற்றுத்தர ஐ.எஸ் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக செயலி மூலம் மூளைச் சலவை செய்து தற்கொலை படை தாக்குதலுக்கு தயார்படுத்தவும், அதற்கான பயிற்சியையும் இந்த செயலி மூலம் குழந்தைகளுக்கு கற்றுத் தர ஐ.எஸ் இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

SHARE