தனது இரு குழந்தைகளையும் மிகவும் கொடூரமாக தாக்கிய தாய் ஒருவர் வரகாபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வரகாபொல-தொரவக்க பிரதேசத்தில் இருந்து இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்ற போதும் இந்தப் பெண் தனது குழந்தையை தாக்கிக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 வயதும், 4 மாதங்களுமேயான குழுந்தையை குறித்த தாய் தாக்கிக்கொண்டிருந்த போதே பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணின் கணவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்ற போது மற்றைய குழந்தை அங்கிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், தான் மனநிலை பாதிக்கப்பட்டவர் என குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த பெண் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.