கிருமிகள் மற்றும் மரபணு வழியாக தான் பொதுவாக நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய சில அரிய வகை நோய்கள் என்னவென்று பார்க்கலாம்.
பேட்டன் நோய்
மரபணு கோளாறு மூலம் பேட்டன் நோய் ஏற்படுகிறது, இந்த நோயின் அறிகுறி குழந்தையின் 5 வயதில் துவங்கி, 10 வயதிற்குள் அவர்களின் ஆரோக்கியத்தை முடக்கி விடும்.
கண் பார்வை இழப்பு, கை, கால்களின் செயலிழப்பு, மூளை வளார்ச்சி மற்றும் சிந்திக்கும் திறன் இழப்பு போன்ற குறைபாடுகள் ஏற்படும். அதனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலம் 20-30 வயதிற்குள் இருக்கும்.
புரோஜெரியா நோய்
மரபணு கோளாறினால் ஏற்படும் இந்த நோய் குழந்தை பிறக்கும் போதே வயதான தோற்றத்தில் இருக்கும்.
இந்த நோயின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, முடி கொட்டி, உடல் தளர்ச்சி அடைந்து, 20 வயதின் தொடக்கத்திலேயே உயிரிழக்க நேரிடும்.
கேண்டில் நோய்க்குறி
இது மிகவும் அரிதான அழற்சி நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் எப்போதும் சூடாகவும், சரும தடிப்பு, வீங்கிய கண்கள், தடிமனான உதவு, கை, கால்கள் ஒன்றோடொன்று இணைந்து, கல்லீரல் வீக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால், விரைவில் மரணம் அடையக் கூடும்.
சிரிப்பு நோய்
ஏஞ்செல்மேன் எனும் சிரிப்பு நோயானது, நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒருவகை நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சிரித்து கொண்டே இருப்பார்கள். மேலும் சிறிய தலை அமைப்பு, பேசுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
தசைவளம் சீர்கேடு
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தசைகளின் அதிக பலவீனம் அடைந்து தோல், கண், மூளை ஆகிய அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். இந்த நோய் 2-6 வயதில் உள்ள குழந்தைகளை அதிகமாக தாக்கும்.
மேலும் இந்நோயினால் கழுத்து எலும்புகள் வலுவிழந்து, தலையை நிமிர்த்த முடியாமல், மூச்சு விட முடியாமல் அவதிப்பட நேரிடும். அதனால் இவர்கள் 20 வயதிற்கு மேல் உயிருடன் இருப்பது மிகவும் கடினம்.