இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, நேற்று குழந்தைகள் தினத்தை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதே போல் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சிறுவர்களுடன் இந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.
மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளுடனான மிகப் பெரிய சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.