குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இரு குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட குழந்தை …!

228

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டியர்பான் நகரில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நேற்று வழக்கம்போல் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு குழந்தை, பராமரிப்பு மையத்தின் ஒரு பகுதியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டுத் தனமாக சுடத் தொடங்கியது.

இதில், அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மீது தோட்டா பாய்ந்தது. இரண்டு குழந்தைகளும் சுருண்டு விழுந்து துடிதுடித்தன. சத்தம் கேட்டு அங்கு அந்த மையத்தின் ஊழியர்கள், காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 வயதே ஆன அந்த குழந்தைகளுக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. வெளிப்படையாக குழந்தைகளுக்கு தெரியும் வகையில் துப்பாக்கியை வைத்திருந்தது ஏற்றுக்கொள்ள முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக பராமரிப்பு மையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE