குழந்தையின் உதட்டில் முத்தமிடக் கூடாது ஏன் தெரியுமா?

212

பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

அதிலும் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சி முத்தமிட வேண்டும் என்பதை அனைவருமே விரும்புவார்கள்.

அதிலும், குழந்தைகளின் உதட்டில் முத்தமிடுவது என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஆனால் அப்படி குழந்தைகளை தூக்கி முத்தமிடும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அப்படி கொஞ்சகூடாது என கூறுவார்கள்.

ஏனெனில் இதற்கு பல காரணங்கள் உள்ளன.

குழந்தையின் இதழ்களில் ஏன் முத்தமிடக் கூடாது?
  • குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவதால், 85% பாக்டீரியாக்கள் வாய் மூலமாக பரவுகிறது. இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • குழந்தைகளை வைரஸ் தொற்று பாதிக்கும் போது, அது முதலில் அவர்களின் கல்லீரல் மற்றும் மூளையை விரைவில் பாதிக்கும். எனவே, குழந்தைகளின் இதழ்களில் முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மூன்று மாதங்களில் உள்ள குழந்தைகளினால் கிருமிகளை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. எனவே வைரஸ் தொற்றுகள் தாக்கிய நபர்கள் குழந்தைகளின் இதழ்களில் முத்தமிடுவதன் மூலம்குழந்தைகளின் இறப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • காய்ச்சல் மற்றும் நோய் தொற்று உள்ளவர்கள் குழந்தைகளுக்கு முத்தமிடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும்.
SHARE