குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – குடும்பத் தகராறின் விளைவு

219

வவுனியா – ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று(03) காலை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கணவனுடன் எற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய தாய், தனது மூன்று வயது மகனுடன் லீசிங் நிறுவனத்திற்கு பணம் செலுத்த செல்வதாகக் கூறி சென்றுள்ளார்.

எனினும் மாலை வரை வீடு திரும்பாததை அடுத்து இன்றைய தினம் காலை அயலிலுள்ள கிணற்றுக்குள் சென்று பார்த்த போது தாய் மற்றும் மூன்று வயது மகன் இருவரும் சடலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5

 

 

 

 

SHARE