குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்

352
பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்
பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும்.

சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகளைப் பார்ப்போம்.

ஒரே நேரத்தை பின்பற்றுங்கள்

குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க ஆரம்பிப்பதன் மூலம், அவர்களின் உயிரியல் உடல் கடிகாரமானது நாளடைவில் அதற்கேற்றாற் போல் மாறிவிடும். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால், குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் உறங்கிவிடுவார்கள்.

இதமான சுற்றுச்சூழல்

குழந்தை தூங்கும் போது, சுற்றுச்சூழலானது அமைதியாக, வெளிச்சமின்றி இருக்க வேண்டும். இதனால் குழந்தை விரைவில் தூங்கிவிடும்.

குழந்தையை அவர்களின் நிலைக்கு விடுங்கள்

ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது, அவர்களுக்கு சுகமாக இருக்கும் நிலையில் தான் தூங்குவார்கள். ஆகவே அவர்கள் தூங்கும் போது, அவர்களின் கை மடங்கியிருந்தால், அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கம் களைந்து, பின் அழ ஆரம்பிப்பார்கள்.

இரவில் தாய்ப்பால் உதவும்

இரவில் குழந்தையை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.

பகல் வேளையில் குழந்தையை விட்டுவிடுங்கள்

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால், அவர்கள் சோர்வடைவதுடன், இரவில் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆகவே எப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவிலும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆகவே அவர்களது போக்கில் விடுங்கள்.

இரவில் குளிப்பாட்டவும்

குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால், அவர்களது உடலானது சோர்வடைந்துவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள்.

மென்மையான இசை

குழந்தைக்கு தாலாட்டு அல்லது மென்மையான இசையை போட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் அந்த இசையை கவனித்தவாறு தூங்கிவிடுவார்கள்.

அரவணைப்புடன் இருங்கள்

குழந்தையை தூங்க வைக்க வேண்டுமானால், அவர்களை அரவணைத்தவாறு இருங்கள். இதனால் குழந்தை தன் தாயின் அரவணைப்பால் எந்த ஒரு பயமின்றி நிம்மதியாக தூங்கும்.

மென்மையான வலை

குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால், அவர்கள் சுகமான தூக்கத்தை மேற்கொள்வார்கள்.

மலங்கழிப்பது

குழந்தையை தூங்கு வைப்பதற்கு முன்பே, அவர்களை மலங்கழிக்குமாறு பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவார்கள்.

SHARE