குழாய்க் கிணற்றில் நிறம் மாறிய நீர்

274
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் மதரசா வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் அமைந்துள்ள குழாய்க் கிணற்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக இளம் நீல நிறத்தில் நீர் வெளிவருகின்றது. இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதாரப் பணிமனையில் நீரின் மாதிரியை ஒப்படைத்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

uvais_jpg2__jpg3_

இந்நிலையில், நீரின் மாதிரி பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு அக்குழாய்க்கிணற்று நீரை அருந்த வேண்டாமெனவும் அவ்வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேற்படி பணிமனையின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.றைஸ் தெரிவித்தார்.

SHARE