குவான்தமாலாவில் புவெகொ எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து 4,000 பேர் இடம் மாற்றம்

151

மத்திய அமெரிக்காவின் குவான்தமாலாவில் புவெகொ எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 4,000 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

எரிமலைக் குழம்பு, நச்சுவாயு, கொதிக்கும் சாம்பல் ஆகியவற்றை எரிமலை கக்கி வருகிறது. பாதுகாப்பான இடங்களில் ஏற்கனவே 2,000 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இதே பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால் 200 பேர் புதையுண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் உதவினர்.

SHARE