குவைத்தில் பல இன்னல்களை அனுபவித்த 26 பெண்கள் நாடு திரும்பினர்

245

குவைத் நாட்டில் தொழில் வாய்ப்புக்காக சென்று அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்த 26 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 6.20 அளவில் இலங்கையை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இன்று நாடு திரும்பியுள்ளனர்.

பல்வேறு காரணங்களால், குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களிலும் அந்நாட்டு அரசு நடத்தும் முகாம்களிலும் 121 இலங்கை பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE