கூகுளுக்கு அபராதம்

91
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா முரண்பட்டுள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கூகுளுக்கு அபராதம் விதித்துள்ள ரஷ்ய நீதிமன்றம்! | Russian Court Has Fined Google

ரஷ்யா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரச்சாரம் என ரஷ்யா விமர்சித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை, சிறப்பு இராணுவ நடவடிக்கை என ரஷ்ய அரசு குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE