கூடுதல் வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு

303

வருடாந்தம் 25 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை இலகுவாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இது தொடர்பான பிரேரணையொன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார்.

அத்துடன் வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விமான நிலையங்களில் விசேட வரப்பிரசாதங்களை வழங்குதல், அரசாங்கத்தின் மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் முன்னுரிமை அளித்தல், அரச வைபவங்களுக்கு அழைப்பு கொடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் நிதியமைச்சர் முன்வைத்துள்ளார்.

அத்துடன் வரி செலுத்துவோரின் நன்மை கருதி வரி ஆலோசனைச் சேவையொன்றும் தாபிக்கப்படவுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இச்சேவை தொழிற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE