தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத விசமிகளின் செயற்பாட்டினால் கொட்டகலை நகரல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய கட்டவுட் சேதமாக்கப்படுள்ளதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இராஜமாணிக்கம் தெரிவித்தார். திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரின் பிரதான சந்தியிலிருந்த கட்டவுட் 08.08.2016 இரவு கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிராந்திய அமைப்பாளரின் முறைபாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திம்புளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ராஜமானிக்கம் கருத்து தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் மலையகம் தழுவிய ரீதியில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதை தாங்கிக்கொள்ளமுடியாத சில விசமிகளினால் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்களின் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்டவுட் கிழித்து சேதமாமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் புதிய கட்டவுட் ஒன்றை மீண்டும் வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்