கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை ஜெனீவா வீதிகளில் இழுத்த இளைஞர்கள்….

196

சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமகளுக்கான் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பேரணி ஒன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று( 26.09.2016) நடைபெற்றது .

இந்த நிகழ்வானது சுவிஸ் நாட்டின் கடுமையான சட்ட ஒழுங்கு நடைமுறைக்கு அமைவாக அனுமதி பெற்று சுவிஸ் காவற்துறை மற்றும் சுவிசில் செயற்படும் தமிழ்க்காவல் என்ற தொண்டர் அமைப்பினதும் கண்காணிப்பின்கீழ் அமைதியான முறையில் நடைபெற்றது பல ஆயிரம் மக்கள் தங்கள் இனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டி இந்நிகழ்வில் உணர்வுடன் கலந்துகொண்டனர் .

ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய ,பிரித்தானியா மக்களும் விசேடமாகக் கலந்துகொண்டனர் .பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விசேட தொடரூர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிலர் ( அண்மையில் மாவை சேனாதிராசா பங்குபற்றிய நிகழ்வில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தி கலகம் செய்தவர்கள் உட்பட) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திரு சம்மந்தன் மற்றும் உறுப்பினர்களான மாவைசேனாதிராச சுமந்திரன் போன்றவர்களின் புகைப்படங்கள அட்டையில் ஒட்டி அவற்றை பேரணியில் இழுத்துவந்தனர் பின்னர் அவற்ரை ஐநா முன்றலில் தீயிட முயன்றனர் ஆயினும் சுவிஸ் காவல்துறையின் கடுமையான சட்ட நடைமுறைகளை புரிந்த தமிழ்க்காவல்த்துறை உறுப்பினர்கள் தடுத்தமையால் அவற்றைத் தீயிடாமல் சிதைத்தெறிந்து காலால் மிதித்து தமது ஆற்றாமையை வெளிப்படுத்திச்சென்றனர்.

இது திட்டமிட்டுச்செய்ய ப்பட்டதா அல்லது ஏற்பாட்டாளர்களுக்கு தெரியாமல், அரங்கேறியதா என்று உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் பேரணியின் ஆரம்பத்தில் இருந்தே பதாதைகள் இழுத்துவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .

அங்குநின்ற பலரை விசனப்படவைதுள்ளது. பிரான்ஸ் நாட்டின் காவல்துறையினரின் மேன்போக்கை சாதகமாகப் பயன்படுத்தி சில தீய சக்திகள் தமது அரசியல் இலாபத்துக்காக எமது இளைய சமுதாயத்தை தவறு செய்ய தூ ண்டுகின்றனரா என எண்ணத்தோன்றுகிறது.geneevageneeva01geneeva02

SHARE