தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ரஞ்சித்த சொய்சா , மஹிந்தாநந்த அளுத்கமகே , குமார வெல்கம மற்றும் கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, பியல் நிசாந்த, ஜானக வாக்கும்பர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்களுடன் பிரத்தியேகமாக தொலைபேசியில் உரையாடி தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து மற்றுமொரு கட்சி உருவாக்குவதற்கு எதிரானவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்பரவின் வெற்றிடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.