இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கையளிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு நாமல் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாமல், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஒரு சோற்றுப் பார்சலை கையளிக்கவும் பொதுமக்கள் தயக்கமும், அச்சமும் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்தால் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினரிடம் எந்தவொரு நிவாரணப் பொருட்களை வழங்கவும் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
எனினும் நாங்கள் எங்களால் முடிந்த வரையில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்போம் என்றும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.